உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும். ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது. தேன் கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுகிறது.
தேனில் விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற இதர வகையான சத்துப்பொருள்களும் உள்ளன.
நம் இதயத்தைப் பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.
தேன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.
• Useful in weight Management.
• Strengthens Immune system.
• Nourishes your skin and face.
• Boosts your memory.
• Home Remedy for Cough.
• Natural home remedy for Dandruff.
• Used for Healing Wounds.
• Acts as a Natural Sleeping Aid.
• Adds flavor as a natural sweeter.
• Use as a digestive aid.